facebook pixel
chevron_right Business
transparent
பட்ஜெட்டிற்கு பிறகு உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் சந்திக்கலாம்: மோடி
உலகப் பொருளாதார மாநாட்டில் தனது உரையினை நிகழ்த்துவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு பிரதமை மோடி இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற முக்கிய அம்சங்கள் குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் உங்களுக்காக இங்கு அளிக்கிறது.
பட்ஜெட் 2018: ஸ்டாண்டர்டு டிடெக்ஸன் மீண்டும் வேண்டும்
மாத சம்பளதாரர்களின் வரி சுமையை குறைக்கும் விதமாக ஸ்டாண்டர்டு டிடக்ஸன் என்னும் நிலையான கழிவு என்னும் முறையை மீண்டும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று மாத சம்பளதாரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். உயர்ந்து வரும் பணவீக்க விகிதம், விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றினால் மாத சம்பளதாரர்கள் திண்டாடினாலும், இந்தியாவில் வருமான வரி செலுத்துவதில் மாத சம்பளம் வாங்குபவர்களே முதலிடம் பெறுகிறார்கள். வருமான வரியில் மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருந்தே 70 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயத்தில் தொழில் துறையினரிடம் இருந்து வசூலிக்கப்படும் வரியானது 30 சதவிகிதம் மட்டுமே. இருந்தாலும் தொழில் துறையினருக்கு கிடைக்கும் பெரும்பாலான சலுகைகள் மாத சம்பளதாரர்களுக்கு கிடைப்பதில்லை.
மன்மோகன்சிங் முதல் அருண்ஜெட்லி வரை
பிப்ரவரி 1ம் தேதி அன்று 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வது ஒரு புறம் இருக்கையில், 1991 முதல் 2017ம் ஆண்டு வரையிலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது என்ன சிறப்பம்சங்கள் இடம் பெற்றன என்பதை பார்க்கலாம். 1991ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்திய கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்தபோது ரிசர்வ் வங்கியின் முன்னால் ஆளுநரான மன்மோகன் சிங்கை பிரதமர் நரசிம்ம ராவ் நியமித்தார். மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தது தொடங்கி, ப. சிதம்பரம், யஸ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம், பிரனாப் முகர்ஜி, பாஜக ஆட்சியில் அருண் ஜெட்லி வரை கடந்த 27 ஆண்டுகளில் நிதியமைச்சர்கள் நாட்டின் நிநிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
கோஏர் வழங்கும் குடியரசு தினை விற்பனை.. ரூ. 726-க்கு விமான பயணம்..!
இந்தியாவின் பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் குடியரசு தின சலுகையாக உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு 726 ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளது. இதே போன்ற ஆஃபர்களை ஏர்ஏசியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்களும் அளித்துள்ள நிலையில் கோஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஜெட்ஏவேஸ் வழங்கும் குடியரசு தின சலுகை.. உள்நாட்டுப் பயணங்களுக்கு 20% வெளிநாட்டுக்கு 30% சலுகை!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட்ஏர்வேஸ் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் உள்நாட்டுப் பயணங்களுக்கு 20 சதவீதம் வரையிலும், வெளிநாட்டுப் பயணங்களுக்கு 30 சதவீதம் வரையிலும் டிக்கெட் கட்டண சலுகையினை அறிவித்துள்ளது. ஜெட்ஏவேஸ் நிறுவனம் வழங்கும் இந்தச் சலுகையானது குடியரசு தினத்தினை முன்னிட்டு வழங்கப்படும் சிறப்புச் சலுகை எனத் தெரிவித்துள்ளனர்.
ரத்த கண்ணீர் வடிக்கும் ஏர்டெல், ஐடியா நிறுவன பங்குகள்.. காரணம் நமது ஜியோ தான்..!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செவ்வாய்க்கிழமை குடியரசு தின சலுகையினை அறிவித்ததை அடுத்துப் புதன்கிழமை பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனப் பங்குகள் 5 சதவீதத்திற்கும் கூடுதலாகச் சரிந்துள்ளன. குடியரசு தின ஆஃபராக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது டாரிப் கட்டணங்களை 25 சதவீதம் வரை குறைத்து அறிவித்துள்ளது.
முதல் முறையாக 100 பில்லியன் டாலரை தொட்ட நெட்பிளிக்ஸ்
யூடியூப்-கிற்கு இணையான சேவை கட்டண முறையில் வழங்கி வரும் நெட்பிளிக்ஸ் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான ஒரு பொழுதுபோக்குத் தளமாக மாறி வருகிறது. இளைஞர்கள் மத்தியில் ஆதிக்கம் நிறைந்து விளங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதன அளவை அடைந்துள்ளது.
தொடர்ந்து 4வது நாளாக புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்.. நிப்டியும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை!
சர்வதேச நாணய நிதியம் இந்திய பங்கு சந்தை உலகின் டாப் 5 பங்கு சந்தையில் ஒன்றாக வரும் என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அமெரிக்காவின் செலவின மசோதாவில் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்ட முடிவுகளுக்கு இரு கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையில் இன்று அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. அமெரிக்க அரசின் இந்த முடிவுகளின் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.
'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
"வங்­கிக் கணக்­கில், குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­கா­மல் உள்ள ஏழை­க­ளுக்கு, வங்­கி­கள் அப­ரா­தம் விதிப்­ப­தில்லை," என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தி­யா­வின் முன்­னாள் தலை­வர், அருந்­ததி பட்­டாச்­சார்யா தெரி­வித்து உள்­ளார். அவர் கூறி­ய­தா­வது: பிர­த­ம­ரின், 'ஜன்­தன் யோஜனா' திட்­டத்­தில், வங்­கிக் கணக்கு துவக்கி உள்­ளோ­ருக்கு, குறைந்­த­பட்ச இருப்பை பரா­ம­ரிக்­கா­மல் உள்­ள­தற்கு, எந்­த­வித அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவர்­க­ளுக்கு, மாதாந்­திர சரா­சரி இருப்பை பரா­ம­ரிப்­ப­தில் இருந்து, விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. எஸ்.பி.ஐ.,யில், பி.எஸ்.பி.டி., எனப்­படும், அடிப்­படை சேமிப்பு கணக்கு, ஏழை­க­ளுக்­கா­கவே உள்­ளது. இக்­க­ணக்­கில், எவ்­வி­த­மான கட்­ட­ண­மும் வசூ­லிக்­கப்­ப­டு­வ­தில்லை. ஒரு வாடிக்­கை­யா­ளர், தனக்கு அனைத்து வச­தி­களும் உள்ள, முழு­மை­யான சேமிப்பு கணக்கு தேவை­ இல்லை எனக் கரு­தி­னால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்­கிற்கு மாற­லாம்.
'பெண்களை முன்னேற்றினால் இந்தியா வளர்ச்சி அதிகரிக்கும்'
"பாலின பாகு­பாட்டை அகற்றி, சமூ­கத்­தி­லும், பணி­க­ளி­லும், பெண்­கள் முன்­னேற்­றத்­தில் தீவிர கவ­னம் செலுத்­தி­னால், இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம் மேலும் வளர்ச்சி அடை­யும்," என, பன்­னாட்டு நிதி­யத்­தின் தலை­வர், கிறிஸ்­டின் லகார்டே கூறி­யுள்­ளார். அவர், டாவோஸ் நக­ரில், உலக பொரு­ளா­தார கூட்­ட­மைப்பு மாநாட்­டில் பேசி­ய­தா­வது: இந்­தியா, நிதிச் சேவை துறை­யில் செய்து வரும் சீர்­தி­ருத்­தங்­களை தொடர வேண்­டும். அத்­து­டன், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை பர­வ­லாக்­க­வும், அதில், பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­க­வும், விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். பணி­களில், ஆண்­க­ளுக்கு இணை­யான அள­விற்கு, பெண்­களின் பங்­க­ளிப்பு உயர்த்­தப்­பட்­டால், இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தத்­தில், 27 சத­வீ­தம் உய­ரும் என, பன்­னாட்டு நிதி­யத்­தின் ஆய்­வில் தெரிய வந்­துள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில், பெண்­கள் மீதான பாகு­பாடு அதி­க­மாக உள்­ளது. உட­ன­டி­யாக, இப்­பி­ரச்­னைக்கு தீர்வு காண வேண்­டும்.
இந்தியாவும், வர்த்தகமும் பிரிக்க முடியாதவை: பிரதமர் மோடி
"சர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளுக்கு, இந்­தி­யா­வில், ஏரா­ள­மான வர்த்­தக வாய்ப்­பு­கள் காத்­தி­ருக்­கின்றன," என, பிர­த­மர் நரேந்திர மோடி தெரி­வித்து உள்­ளார். அவர், சுவிட்­சர்­லாந்தின், டாவோஸ் நக­ரில், சர்­வ­தேச தொழி­ல­தி­பர்­க­ளுக்கு விருந்து கொடுத்­தார். இதில், ஏர்­பஸ் குழும தலைமை செயல் அதி­காரி, டிர்க் ஹோக், ஹிட்­டாச்சி குழும தலை­வர், ஹிரோகி நகா­நிஷி உள்­ளிட்ட, பன்­னாட்டு குழு­மங்­க­ளைச் சேர்ந்த, 40 பேரும், இந்­தி­யா­வின் முன்­னணி தொழி­ல­தி­பர்­கள், 20 பேரும் பங்­கேற்­ற­னர். இது குறித்து, வெளி விவ­கா­ரங்­கள் அமைச்­ச­கத்­தின் செய்­தித் தொடர்­பா­ளர், ரவீஷ் குமார் கூறி­ய­தா­வது: விருந்து நிகழ்ச்­சி­யில், 'இந்­தியா என்­றால் வர்த்­த­கம்' என்ற தலைப்­பில், பிர­த­மர் மோடி உரை­யாற்­றி­னார்.
பாரத் டைனமிக்ஸ்: பங்கு வெளியீட்டிற்கு வருகிறது
பொதுத் துறை­யைச் சேர்ந்த, பாரத் டைன­மிக்ஸ் நிறு­வ­னம், 1970ல் துவங்­கப்­பட்­டது. ஏவு­கணை, ராணுவ தள­வா­டங்­கள் ஆகி­ய­வற்­றின் தயா­ரிப்­பில் ஈடு­படும் இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. இதற்­கான ஆவ­ணங்­களை, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, 'செபி'யிடம் தாக்­கல் செய்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில், இந்­நி­று­வ­னம் நிகர லாப­மாக, 2,212 கோடி ரூபாய் ஈட்­டி­யி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­று­வ­னத்­தை­யும் சேர்த்து, ஒரு மாதத்­திற்­குள், பங்கு வெளி­யீட்­டிற்கு அனு­மதி கோரி, 'செபி'யிடம், பொதுத் துறை­யைச் சேர்ந்த நான்கு நிறு­வ­னங்­கள் விண்­ணப்­பித்து உள்ளன. ஏற்­க­னவே, பொதுத் துறை­யைச் சேர்ந்த, மிஷ்ர தத்து நிகாம், ரைட்ஸ், இரிடா ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க, 'செபி'யிடம் அனு­மதி கோரி உள்ளன. நடப்பு நிதி­யாண்டு இறு­திக்­குள், இந்த நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீடு நடை­பெ­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
சைபர் பாது­காப்பு, பரு­வ­நிலை மாற்­றம் போன்ற பிரச்­னை­க­ளை­யும் மீறி, முத­லீ­டு­களை ஈர்க்­கும் நாடு­களின் பட்­டி­ய­லில், இந்­தியா, ஜப்­பானை விஞ்சி, 5வது இடத்­திற்கு முன்­னேறி உள்­ளது. பிரைஸ் வாட்­டர் ஹவுஸ் கூப்­பர் நிறு­வ­னம், ஆண்­டு­தோ­றும், சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­கள் தெரி­விக்­கும் கருத்­துக்­களின் அடிப்­ப­டை­யில், முத­லீட்­டிற்கு உகந்த நாடு­களின் பட்­டி­யலை வெளி­யி­டு­கிறது. இதன்­படி, இந்­தாண்­டுக்­கான பட்­டி­யல், சுவிஸ் நாட்­டின், டாவோஸ் நக­ரில்,உலக பொரு­ளா­தார மாநாட்­டில் வெளி­யி­டப்­பட்­டது. இந்த பட்­டி­ய­லில், சர்­வ­தேச நிறு­வ­னங்­களின் தலைமை செயல் அதி­கா­ரி­களில், 46 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன், அமெ­ரிக்கா முத­லி­டத்தை பிடித்­துள்­ளது. 33 சத­வீ­தம் பேர் ஆத­ர­வு­டன், சீனா இரண்­டா­வது இடத்­தை­யும், ஜெர்­மனி, 20 சத­வீத ஆத­ர­வு­டன், மூன்­றா­வது இடத்­தை­யும் பிடித்­துள்ளன. பிரிட்­டன், 15 சத­வீ­தம் பேரின் ஆத­ர­வு­டன், நான்­கா­வது இடத்தை பிடித்­துள்­ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு சென்னையில் ரூ.75, மும்பையில் ரூ.80: டீசலும் தொடர்ந்து உச்சம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு எகிறிக் கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. முன்பு மாதத்திற்கு 2 முறை விலை மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினசரி விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. பைசா கணக்கில் விலை மாற்றம் இருப்பதால் விலை உயர்வு கண்கூடாக தெரிவதில்லை. கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 14ம் தேதி வரை தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதன்பிறகு பெட்ரோல் டீசல் விலை ஓசைப்படாமல் உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு டெல்லியில் ரூ.73, மும்பையில் ரூ.80 : டீசலும் தொடர்ந்து உச்சம்
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இதுவரை இல்லாத அளவுக்கு எகிறிக்கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. முன்பு மாதத்திற்கு 2 முறை விலை மாற்றம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தினசரி விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. பைசா கணக்கில் விலை மாற்றம் இருப்பதால் விலை உயர்வு கண்கூடாக தெரிவதில்லை. கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 14ம் தேதி வரை தொடர்ந்து விலை குறைந்து வந்தது. இதன்பிறகு பெட்ரோல் டீசல் விலை ஓசைப்படாமல் உயர்ந்து வருகிறது. பாஜ அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்ச அளவை எட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி உடன் போட்டி போடும் அமெரிக்கா.. வெற்றி யாருக்கு..?
2018இல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் டிரில்லிங் பணியை விரைவுபடுத்த திட்டமிட்டு வருகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகச் சூழ்நிலையைக் கண்டு, இந்த முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ளதாகச் சர்வதேச எனர்ஜி அமைப்பு (IEA) தெரிவித்துள்ளது.
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி என்ன பேசினார்.. முக்கிய குறிப்புகள்..!
சுவிட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸில் உலகப் பொருளாதார மாநாடு செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வருகிறது. இந்தியாவில் செய்யப்படும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்காவும், தொழில் வளர்ச்சிக்காகவும் நடந்த இந்த மாநாட்டில் பேசிய மோடி இந்தியாவின் வளர்ச்சி குறித்தும், எதிர்காலம் குறித்தும் இந்தியில் உரையாற்றினார். எனவே உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி எதைப் பற்றி எல்லாம் பேசினார் என்ற முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கும் பார்க்கலாம்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்திருக்கிறது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஜன., 23) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,882-க்கும், சவரனுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.23,056-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,820-க்கும் விற்பனையாகிறது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.42-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,270-க்கும் விற்பனையாகிறது.
விமானத்தில் வைஃபை மூலமாக இணையதளம் பெற கட்டணம் எவ்வளவு..!
விரைவில் இந்தியாவில் விமானங்கள் மூலமாகப் பறக்கும் போது இணையதளச் சேவையினை அளிக்க அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் 20 முதல் 30 சதவீதம் வரையிலான பயணக் கட்டணத்தினை வைஃபை கட்டணமாக வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. விமானத் துறை மற்றும் டிராயின் இந்த முடிவினால் விமானப் பயணிகளுக்கு இணையதளம் மட்டும் இல்லாமல் குரல் அழைப்புகளுக்கான சேவையும் வழங்கப்பட இருக்கிறது.
குறைந்தபட்ச வருமான வரி விதிப்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் :எஸ்பிஐ
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் அமலாக்கம் செய்யப்பட்ட நிலையில், குறைந்தபட்ச வருமான வரி அளவை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாயில் இருந்து 50,000 ரூபாய் அதிகரித்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என எஸ்பிஐ ஆய்வு அறிக்கை கூறுகிறது. வருமான வரி விதிப்பை 3 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தினால் சுமார் 75 லட்சம் மக்கள் பயனடைவார்கள் எனவும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


50K+ people are using this