facebook pixel
chevron_right Entertainment
transparent
வித்தியாசமான கதைக்களம் கொண்ட "கூட்டாளி" படத்தின் டிரைலர்!!
எஸ்.கே மதி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள், நடிகைகள் நடிபில் உருவாகி வரும் படம் கூட்டாளி. இந்த படத்தில் கதாநாயகனாக சதீஷ், அவருக்கு ஜோடியாக கிரிஷா நடிகிறார். மேலும் கல்யாண், அருள் தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், அப்புக்குட்டி, கலைஅரசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கூட்டாளி படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தை எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு மற்றும் பி. பெருமாள் சாமி இணைந்து தயாரிக்கிறார்கள். தற்போது கூட்டாளி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
யுவன் வெளியிட்ட அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசர்!!
அறிமுக இயக்குநர் முத்து கோபால் இயக்கத்தில், அமீர் நடிப்பில் உருவாகி வரும் படம் அச்சமில்லை அச்சமில்லை. இந்த படத்தில் அமீர்-கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். இந்த படத்ததை அமீர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'டீம் வொர்க் புரொடக்ஷன் ஹவுஸ்' மூலம் தயாரித்து வருகிறார். இசை அருண் குமார் அமைக்கிறார். அச்சமில்லை அச்சமில்லை படத்தின் டீசரை யுவன் ஷங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
'அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழில் எனக்கு வாய்ப்பே கிடக்கல!' நடிகையின் வேதனை
தமிழ்த் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக, கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்புப் புகார் தெரிவித்துள்ளார். இந்தியா டுடே குழுமம் சார்பில் நடத்தப்பட்ட 'தி சௌத் இந்தியன் கான்க்ளேவ்' நிகழ்ச்சி, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்தது. அதில், 'செக்ஸிசம் இன் சினிமா' என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில், படத்தொகுப்பாளர் பீனா பால், நடிகைகள் பிரணித சுபாஷ் மற்றும் ஸ்ருதி ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய ஸ்ருதி ஹரிஹரன், 18 வயதில் நான் முதல் கன்னடப் படத்தில் நடித்தபோது, பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். அந்த நிகழ்வு, என்னுள் பெரிய வடுவாய் மாறிப்போனது. அங்கு நடந்ததுகுறித்து எனது டான்ஸ் மாஸ்டரிம் கூறியபோது, 'இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள்வது எப்படி என்பது தெரியாவிட்டால், சினிமாத்துறையை விட்டே வெளியேறிவிடு' என்றார்.
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர், கரன் ஜோகர் இயக்கும் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கரன் ஜோகரிடம் இது பற்றி கேட்டதற்கு, இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை. மனுஷியின் சாதனைகள் குறித்து நாங்கள் மிகவம் பெருமை கொள்கிறோம். நான் நடத்திய அழகு போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் அப்போது தான் அவரை சந்தித்தேன். அவரது ஆற்றலை பார்த்து வியந்துள்ளேன். அதற்கு பிறகு அவரை சந்திக்கவில்லை.
பிரியங்கா சோப்ரா லிப் டூ லிப் முத்தம்
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் நடித்த தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர், தற்போது ஹாலிவுட் படம் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில், ஹாலிவுட் தொலைக்காட்சி சீரியலான குவாண்டிகோவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஏற்கனவே குவாண்டிகோவின் இரண்டு சீசன் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசனுக்காக படபிடிப்பு நடந்து வருகிறது. நியூயார்க் நகரில் நடைபெற்ற படபிடிப்பில், குவாண்டிகோ சீரியலில் நடிக்கும் நடிகர் ஆலன் பவலும், பிரியங்கா சோப்ராவும் லிப் டு லீப் முத்தம் கொடுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பொங்கல் முடிந்து தீபாவளி வாழ்த்து சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ்
எழுத்தின் அளவு: தலைப்பைப் பார்த்து குழம்பிப் போயுள்ளவர்களுக்கு இடையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏன் அப்படி சொன்னார் என்பது விஜய் ரசிகர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாவதை முன்னிட்டு, படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று அவருடைய டுவிட்டரில், படத்தின் துவக்கத்தைப் பற்றியும், எப்போது படம் வெளியாகப் போகிறது என்பதைப் பற்றியும் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். அவருடைய டுவிட்டரில் 'இனிய தீபாவளி வாழ்த்துகள் தோழர்களே' எனக் குறிப்பிட்டதும் அதை விஜய் ரசிகர்களும், ஏன் அஜித் ரசிகர்களும் கூட உடனடியாகப் புரிந்து கொண்டார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயப்பிரதா அழகைப் பாராட்டிய ஹீரோயின்கள்
எழுத்தின் அளவு: தமிழ் சினிமாவில் குறைந்த அளவிலான படங்களில் நடித்திருந்தாலும் நடிகை ஜெயப்பிரதாவிற்கு இங்கும் ஒரு காலத்தில் நிறையவே ரசிகர்கள் இருந்தார்கள். 40 வயதைக் கடந்தவர்களைக் கேட்டால் ஜெயப்பிரதாவின் அழகைப் பற்றி உண்மையிலேயே வர்ணித்துப் பேசுவார்கள். ஆண்கள் ஜெயப்பிரதாவின் அழகை வர்ணித்துப் பேசினால் பரவாயில்லை. ஆனால், பெண்கள், அதிலும் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயின்களாக இருந்தவர்களே அவரது அழகைப் பற்றிப் பேசி வியக்க வைத்தார்கள். ஜெயப்பிரதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கேணி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. படத்தில் அவருடன் நடிக்கும் ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோருடன் சிறப்பு விருந்தினராக சுகாசினியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய 80களின் முன்னணி ஹீரோயின்களான இவர்கள் ஜெயப்பிரதாவின் அழகை அளவுக்கதிகமாகவே பாராட்டிப் பேசினார்கள்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப் பொலிவுடன் ரிலீசாகும் கமல் படம்!
பழைய படங்களை புது மெருகேற்றி டிஜிட்டலில் வெளியிடுவது இப்போது அதிகரித்து வருகிறது. எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப் பெண், எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் இப்படி வெளியாகின. அடுத்து சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், சிவகாமியின் சபதம், வசந்த மாளிகை போன்ற படங்களும் வெளியாகின. ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை புத்தம் புதிதாக டிஜிட்டலில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்தார்கள். அடுத்து கமல் ஹாஸன் படங்களையும் இப்படி டிஜிட்டல் மயமாக்கும் வேலை நடந்து வருகிறது. 33 ஆண்டுகளுக்கு முன் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான படம் காக்கி சட்டை. கமல் ஹாஸன், அம்பிகா, சத்யராஜ் நடித்த பக்கா கமர்ஷியல் படம். இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் மெகா ஹிட்டடித்தன.
கோஹ்லி மனைவி மாதிரி நம்ம அனுஷ்காவுக்கு தெளிவு இல்லை
பாலிவுட் நடிகை அனுஷ்கா போன்று நம்ம அனுஷ்கா தெளிவு இல்லை என்கிறார்கள். பிரபாஸும், அனுஷ்காவும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பல மாதங்களாக பேசப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவருமே இதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் பாகுமதி பட நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா கூறியதாவது,.
மதம் படத்தின் ட்ரைலர் வெளியானது!!
ரஜ்னி இயக்கத்தில், ஹரிஸ் குமார் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மதம். இந்த படத்தில் விஜய் ஷங்கர், சுவாதிஸ்தா கிருஷ்ணன் நடித்துள்ளனர். படத்திற்கு இசை நிரு அமைத்துள்ளார். இந்த படத்தை காளி காம்பாள் பிலிம்ஸ் வழங்குகிறது. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.
வீட்டு வேலைக்காரர் திருமணத்தில் குடும்பத்தோடு கலந்துகொண்ட சூர்யா, கார்த்தி, சிவகுமார்!
நடிகர் சிவகுமார் அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் ரோல்மாடலாக இருந்து வருபவர். திரையுலகில் பலருக்கும் முன்மாதிரிக் கலைஞர். கலையுலக மார்க்கண்டேயன் என அழைக்கப்படும் சிவகுமார் தனது நல்ல குணங்களின் மூலம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர். இவரைப் பற்றி பல நல்ல விஷயங்கள் இவரிடம் நெருக்கமானவர்கள் மூலம் அவ்வப்போது வெளியாகும். சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் பங்கேற்கும் ஒவ்வொரு மேடைகளிலும், சிவகுமாரை பற்றி யாராவது நல்ல விஷயங்களை மேற்கோள் காட்டுவார்கள். அவரைப் போலவே அவரது மகன்களும் திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளங்குவதாக பெருமையாகக் கூறுவார்கள். இந்நிலையில், தற்போது ஒரு நெகிழ்ச்சியான தருணம் நிகழ்ந்துள்ளது. சிவகுமார் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வருபவர்கள் முருகன், கோவிந்தம்மாள். இவர்களது திருமணம் இன்று திருப்பதியில் நடைபெற்றிருக்கிறது.
ஆன்மீக அரசியல் அல்ல... நீர்மிக அரசியல்: பார்த்திபன்
கேணி படம் ஆன்மீக அரசியல் பேசவில்லை. நீர்மீக அரசியல் பேசுகிறது என்று நடிகர் பார்த்திபன் கூறினார். ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கேணி'. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில் ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
சமந்தாவுக்கு கேக் ஊட்டிய விஷால்... 'இரும்புத்திரை' ஷூட்டிங் ஓவர்!
அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஆகியோர் நடித்துவரும் 'இரும்புத்திரை' படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் நடித்துவரும் 'இரும்புத்திரை' படம் ஜனவரி மாதம் வெளிவர உள்ளது. 'இரும்புத்திரை' படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
தளபதியை கலாய்த்ததை பற்றி கேட்டவரிடம் மூடிட்டு போ என்ற எஸ்.ஆர். பிரபு
நீ முடிட்டு போ என்று தனது ட்வீட் பற்றி கமெண்ட் போட்டவரிடம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபல டிவி சேனலில் பணியாற்றும் சங்கீதா, நிவேதிதா ஆகிய இரண்டு நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர். இதை பார்த்து சூர்யா ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
பாவம்யா அந்த புள்ள ஜூலியும், கீர்த்தி சுரேஷும்
ரஜினி, கமல் என்று இரண்டு ஜாம்பவான்கள் அரசியலுக்கு வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் பிசியாகிவிட்டனர். ஒரு பக்கம் உலக நாயகன் கமல் ஹாஸன் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்கிறார். மறுபக்கம் தனிக் கட்சி துவங்கும் வேலையில் பிசியாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கிடையே மீம்ஸ் கிரியேட்டர்களும் பிசியாகிவிட்டனர். கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க Read more about: rajinikanth, cinema, memes , ரஜினிகாந்த் , சினிமா , மீம்ஸ் English summary Memes on legends Rajinikanth, Kamal Haasan are rocking on social media. Memes creators never ever forget actresses Keerthy Suresh and Julie.
'ஹிப் ஹாப்' ஆதிக்கும் சத்யம் தியேட்டருக்கும் இப்படியொரு கனெக்‌ஷனா.. விழாவில் நெகிழ்ச்சி!
'ஹிப் ஹாப் தமிழா' ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து, நாயகனாக நடித்து ஹிட்டான படம் 'மீசைய முறுக்கு'. 'மீசைய முறுக்கு' படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. யூ-ட்யூபில் பல சாதனைகளைப் புரிந்தன இப்படத்தின் பாடல்கள். 150 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்திருக்கிறது 'மீசைய முறுக்கு' ஆல்பம். அந்த வெற்றிக்குக் காரணமான இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விழா சென்னை சத்யம் சினிமாஸில் நேற்று நடைபெற்றது.
அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் நடனம் கற்றுக் கொள்ள சென்ற சிவகார்த்திகேயன்
அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் நடனம் கற்றுக் கொள்ள சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார், நடனப் புயல் சிவா நடித்து வரும் படம் தமிழ் படம் 2.0. படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அமுதன் காமெடியாக ட்வீட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷை கலாய்த்திருந்தார் அமுதன்.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


50K+ people are using this