facebook pixel
chevron_right Health
transparent
சிறுநீரகப் பையில் புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள்!!
ஒவ்வொரு வருடமும் 11000 ஆண்கள் மற்றும் 5000 பெண்கள் சிறுநீர்ப்பை புற்று நோயால் பலியாகின்றனர். பொதுப்படையாக ஏற்படும் புற்று நோயில் 6வது இடத்தை பிடிக்கிறது இந்த சிறுநீர்ப்பை புற்று நோய். இந்த புற்று நோயின் தொடக்கத்தில் சில அறிகுறிகள் தென்படுகின்றன. அவற்றை அறிந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் மனித உயிரை காப்பது சுலபம். ஆகவே அந்த அறிகுறிகளை இங்கே கொடுத்திருக்கிறோம். இதனை உணர்ந்து உடனடியாக செயல்படுவது நல்லது. சிறுநீர்ப்பை புற்று நோயின் ஆரம்ப கட்டத்தில் சில அறிகுறிகள் பற்றிய தகவலை கீழே காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
மசாலா உணவுகளில் சேர்க்கும் கிராம்பின் ஆச்சரிய உண்மைகள்!!
நீங்கள் கிராம்பை எடுத்து கொண்டால் அது அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் பயன்கள் மட்டும் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த சின்ன மசாலா பொருள் சமையலில் அற்புதமான சுவையை அள்ளித் தருகிறது. இந்த கிராம்பு பூக்களுடைய மொட்டுகளை காய வைத்து தயாரிக்கப்படுகிறது. பழைய கால வரலாற்று படி பார்த்தால் சைரன் காலமான 1700 பி. சி வருடங்களுக்கு முன்பு இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டுரையில் இன்னைக்கு கிராம்பின் அற்புத நன்மைகளை பற்றி காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
ஒரு ஸ்பூன் படிகாரத்தூள் இருந்தா எந்த மாதிரியான நோய்களுக்கு நிவாரணம் பெறலாம் தெரியுமா?
சிறிதுகாலம் முன்பு வரை, படிகாரம், வீடுகளில் இருந்த முதலுதவிப்பெட்டிகளில் அதிகம் காணப்படும் ஒரு பொருளாக இருந்தது. சிறிய காயங்கள், உடல் வலி, பல் வலி, சரும பாதிப்புகள், இருமல், மூல வியாதி, கண் பாதிப்புகள் போன்றவற்றை, சரிசெய்ய பெரிதும் பயன்பட்ட ஒன்றாக விளங்கியது, படிகாரம். பார்த்திருக்கலாம், சில வீடுகளில், வீட்டின் வாசலில் படிகாரத்தை கட்டி தொங்கவிட்டிருப்பர், இதன் மூலம், திருஷ்டி போன்ற கெட்ட விசயங்கள் வீட்டினுள் நுழைவதைத் தடுக்கவும், நச்சுக் காற்றை விலக்கவும் முடியும் என நம்பினர். இதேபோல, படிகாரத்தை லாரி, டிராக்டர், வேன் போன்ற கனரக வாகனங்களின் முன்புறம் கட்டி வைத்திருப்பபார்கள். சிலர், முடி வெட்டும் கடைகளில், ஷேவிங் செய்த பின்னர், முகத்தில் படிகாரத்தைத் தடவுவதைப் பார்த்திருப்பார்கள், எதனால், படிகாரத்தை முகத்தில் தடவுகிறார்கள், என்று சிலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
சரும வியாதியை போக்கி, ஆயுளை அதிகமாக்கும் சிவனார் வேம்பு மூலிகையின் அற்புதம்
சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது. இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ பலன்கள் மிக்கவையாக இருந்தாலும், இதன் வேரே, மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிவனார் வேம்புவின் பொதுவான குணங்களாக, உடல் எரிச்சல், கட்டிகள், நச்சுக்கள் இவற்றைப் போக்கி, உடலை வலிவாக்கும் ஆற்றல் மிக்கது. அல்சர் எனும் குடல் புண்ணை சரிசெய்யும் ஆற்றல் மிக்க சிவனார் வேம்பு, பல்வேறு சரும பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
உங்களது கல்லீரலில் அதிகப்படியான நச்சுக்கள் உள்ளது என்பதற்கான அறிகுறிகள்!
கல்லீரல் மட்டுமே உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இது உடலின் மிக முக்கியமான உள்ளுறுப்பு ஆகும். இது உடலின் சக்தியை சேமித்து வைக்கிறது. இது ஹார்மோன்களின் இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது. அப்படியென்றால் இதனுடைய முக்கியத்துத்தை பற்றி உங்களிடம் சொல்ல தேவையில்லை. உங்களுக்கே இதன் முக்கியத்துவம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா. கல்லீரல் கோளாறு என்பது மிகவும் ஆபத்தை தரும் ஒன்று. கல்லீரல் பழுதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அந்த பிரச்சனையை எளிதாக சரி செய்து விடலாம். ஆனால் இதனை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அது பெரிய ஆபத்திற்கு காரணமாக அமைந்துவிடும். இதன் ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து இது தான் பிரச்சனை என்று கண்டறிவது மிகவும் கடினம்.
சர்க்கரை நோயாளிகள் முட்டைகோஸ் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!!!!
மனித இனத்துக்கு முதலில் அறிமுகமான காய்கறிகளில் ஒன்று. 200-ம் ஆண்டில் கிரேக்கர்களும், ரோமானியர்களும் முட்டைகோஸை பல்வேறு காரணங்களுக்கு பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது. உணவு உண்பதற்கு முன்பாக முட்டைகோஸ் உண்ணும் பழக்கம் ரோமானியர்களிடம் இருந்திருக்கிறது. ரோமானிய அரசப் பிரதிநிதிகளின் ஒருவராக இருந்த கேட்டோ, 'முட்டைகோஸுக்கு பசியை தூண்டும் தன்மை உண்டு' என தன்னுடைய குறிப்பில் எழுதி வைத்திருக்கிறார். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
நாம் சாப்பிடும் மருந்துகள் விஷமாகும் அதிர்ச்சி!
இன்றைக்கு பலருக்கும் உடனடி நிவாரணம் மீது ஈர்ப்பு அதிகம். எதுவாக இருந்தாலும் உடனடியாக கிடைத்திட வேண்டும். உடல் உபாதைகள் எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் சட்டென குறைந்திட்டால் போதும். அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவுக்கும், பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்று எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் இன்றைக்கு குறைகிறது, இன்றைக்கு வலி மறைகிறதே என்ற சமாதான பதில் தான் நமக்கு கிடைக்கும். உயிருக்கே ஆபத்து என்று எச்சரிக்க வேண்டிய பொருட்கள் தான் பெரும்பாலும் தடை செய்யப்படும். யாரும் அதனை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அப்படி வெளிநாடுகளில் எல்லாம் தடை செய்யப்பட்டு இந்தியாவில் சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய மருந்துகளின் பட்டியலை மட்டும் இப்போது பார்க்கலாம்.
டென்ஷனா இருக்கா... வாங்க உடைக்கலாம்
'தாங்க முடியாத மன உளைச்சலில் இருக்கிறீர்களா. நாங்க இருக்கோம்' என்று ஆறுதல் சொல்லி வழிகாட்டுகிறார்கள் Break room ஆசாமிகள். மனதுக்குள் கொந்தளிக்கும் உணர்வுகளை அப்படியே அடக்கிவைத்தால் ஆபத்து. அதனால், அவ்வப்போது அதை உடைத்தெறிய வேண்டும் என்பதுதான் இதன் முக்கியமான ஐடியா. அப்படி என்ன ஐடியா என்று ஆர்வமாக இருக்கிறதா. கோபம் தலைக்கேறினால் கைக்குக் கிடைப்பதை விட்டெறிவதும், உடைப்பதும்தான் நம்முடைய தொன்று தொட்ட பழக்கம். செல்போனை உடைப்பது, டி.வி ரிமோட்டை உடைப்பது, சமயத்தில் டி.வியையே கூட உடைப்பது என்ற நம் ஆவேசத்தைத் தணிக்கும் வேலையை, அரியானா மாநிலத்தில் புரொஃபஷனலாக மாற்றியிருக்கிறார்கள். குர்கான் நகரத்தில் இதற்காக Break room என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். டென்ஷனாக இருந்தால் அங்கு சென்று, ரிலாக்ஸாகத் திரும்பி வரும் வகையில் பல 'அடடா' யோசனைகள் அங்கு இருக்கிறது.
கம்ப்யூட்டராலும் களைப்பு வரும் !
உடல் உழைப்புதான் நம்மை சோர்வாக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நிஜம் அது இல்லை. '3 கிலோ மீட்டர் ஓடிய பின் உண்டாகும் உடல் சோர்வு சில மெயில்கள் அனுப்புவதாலும் வரக்கூடும்' என்கிறார் அமெரிக்க தூக்க மருத்துவ நிபுணரான ஸ்டீவன் பெயின்ஸ்வர். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு என்ன ஆற்றல் தேவைப்படுகிறதோ அதே ஆற்றல்தான் ஒரு கணக்குக்குத் தீர்வு காண்பதற்கும் தேவைப்படுகிறது. இந்த இரண்டு வெவ்வேறு வேலைகளைச் செய்யவும் மனித உடலுக்கு வெவ்வேறுவிதமான ஆற்றல் தேவைப்படுவதில்லை. இந்த இரண்டுவிதமான வேலைக்கும் மனித இதயம் ஒரே மாதிரியான அட்ரினலின் உற்பத்திக்கான வேலையில்தான் ஈடுபடுகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் உழைப்பைக் காட்டிலும் மூளை உழைப்புக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. குறிப்பாக, உடலுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை விட 20 சதவீதம் அதிகமான ஆக்ஸிஜன் மூளைக்குத் தேவைப்படுகிறது.
மழைகால மின்விபத்து செய்யக்கூடாதவை என்ன?
மழைநேரத்தின்போது, சாலைகளில் வாகன விபத்துகள் மட்டுமல்ல, மின் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மட்டும் போதாது. பொதுமக்களும் விழிப்புடன் இருந்தால் மட்டுமே உயிரிழப்புகளை தடுக்க முடியும். ஏனெனில் சாலை விபத்துகள் போல் அன்றி, மின்விபத்துகளில், உயிர்பலி நிச்சயம் எனும் அளவுக்கு சேதம் உள்ளது. திடீரென ஒருவருக்கு ஷாக் அடித்து, விபத்து ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவி அளிக்க வேண்டும், அந்த சமயத்தில் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். சாலையில், அறுந்து கிடந்த மின்கம்பிகளைக் கண்டால் உடனடியாகப் பக்கத்திலிருக்கும் மின் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதற்கு முன் அப்பகுதி வழியாக யாரும் செல்ல முடியாத படி தடை ஏற்படுத்துவது சிறந்தது.
கற்கண்டு என்ற மாமருந்து
யானை இறந்தால் ஆயிரம் பொன், பனை இருந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி உண்டு. பனை கிழங்கில் இருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரமாகும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது. பனங்கற்கண்டு வாத பித்தம் நீக்கும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற வெல்லத்தை கருப்பட்டி என்பர். இதை சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாக்குவது சர்க்கரை, பனங்கற்கண்டு எனப்படும். பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும்.
மூலத்தை விரட்டும் துத்தி இலைத்தோசை!
மனிதர்களுக்கு எந்த நோய் வந்தாலும், உடல் உபாதைகள் ஏற்பட்டாலும் அது சங்கடத்தையே தரும். எனவே, ஆரோக்கியமான உடல்நலனையே அனைவரும் விரும்புவர். நமது முன்னோர் தற்போது உள்ள நவீன மருத்துவமோ, மருந்துகளோ இல்லாத நிலையிலும் கூட ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழ்ந்தனர். அதற்கு காரணங்களில் ஒன்ற, கடுமையான உடல் உழைப்பு, மற்றொன்று ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவு முறை. ஆதிமனிதர்கள் மருந்தே உணவாகவும், உணவே மருந்தாகவும் தான் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். தங்கள் வீடுகள் அருகிலேயே செடிகள், கொடிகள், அனைத்தின் மருத்துவ மற்றும் மூலிகை குணங்களை அறிந்து அவற்றை காலக்கிரமத்தில், உணவோடு சேர்த்து பயன்படுத்தி வந்தவர். அதிலொன்று தான் காட்டுக்கீரைகளை கண்டறிந்தது. அதில் வெட்டுக்கீரை, தும்பை, குப்பை மேனி, துத்தி, அகத்தி, வல்லாரை என்று அநேகம் உண்டு. துத்தக்கீரையானது மூலநோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
தூக்கம் நோய் தீர்க்கும் நல்ல மருந்து
ஒரு ஆரோக்கியமான மனிதன் குறைந்தது எட்டு மணி நேரம் ஆழ்ந்து உறங்க வேண்டும். அப்படி உறங்கினால் பல நோய்கள் நெருங்காது. இந்தியர்களை பொறுத்தவரை உழைக்கும் நேரத்தை விட, உறங்கும் நேரம் குறைவு. இதற்கு முக்கிய காரணம் மன உளைச்சல், கவலை, டென்ஷன், வாழ்க்கை மீதான பயம் காரணமாக இருக்கிறது. தூக்கமின்மையை இன்சோம்னியா' என்று அழைக்கின்றனர். உடலுக்குத் தேவையான அளவு தூங்க முடியாமல் இருப்பது நோய் அறிகுறியாகும். தூங்குவதில் சிரமம் இருந்து, குறைவாக தூக்கத்தினால், இது போன்ற கோளாறுகள் ஏற்படும். இது ஒரு நோயின் அறிகுறியாகும். உறக்கமின்மையை ஒரு நோயாக கருத முடியாது. ஆனால் நோய்கள் உருவாக தூக்கமின்மை காரணமாக அமையும். தூக்கமின்மையில் மூன்று வகை உள்ளன.
உடலை சுத்தம் செய்யும் ஆமணக்கு எண்ணெய்
மருத்துவ குணமுள்ள விதைச்செடிகளில் ஆமணக்கு சிறந்ததாகும். இதன் இலை, வேர், விதை, எண்ணெய் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. சிற்றாமணக்கின் இலைகளைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல் வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். இலையை சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டினால் பால் பெருகும். ஆமணக்கின் இலையை விளக்கெண்ணெய் தடவி அனலில் வதக்கிக் கட்டிகளில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வெளி மூலம், ரத்த மூலம் மற்றும் ரத்தம் கசியும் புண்களில் ஆமணக்கு இலையை அரைத்து பூசி வந்தால், ரத்தக் கசிவு மறையும்; ரணம் ஆறும்.
ஞாபக சக்திக்கு வால்நட்
உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல. நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன. சிக்கிம், நேபாளம், இமாலயப்பகுதிகளில் வளரும் அக்ரூட் வகை மரங்களில் இருந்து கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. இதிலுள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம், உயிரணுக்களை பெருக்குகிறது. மேலும் ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும் தன்மை கொண்டவை. மூளையை அமைதிப்படுத்துவதோடு, டிமென்ஷியா என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் வரவிடாமல் தடுக்கிறது. இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் உள்ளன. இதனால், கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து நல்ல கொழுப்பை அளிக்கிறது.
தினமும் 4 பேரிட்சம் பழம்- உங்க தொப்பையை வேகமா கரைக்கும் !! எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா?
பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என நிறைய பேர் ஒதுக்கி விடுவார்கள். அதுபோல் சர்க்கரை வியாதி இருப்பவர்களும் பேரிச்சை சாப்பிடலாம். பேரிச்சைம் பழம் எப்படி உங்கள் உடல் எடை குறைக்க உதவும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம். அதற்கு முன் பேரிச்சையைப் பற்றிம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களைக் காணலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.
டாக்டர் ஏன் நாக்கை நீட்டச் சொல்கிறார்?
நம் எண்ணத்தில் உதிக்கும் சிந்தனைகளை மற்றவர்களிடம் பறிமாறிக் கொள்ளவும், நாம் உண்ணும் உணவை பற்கள் அரைக்கத் தக்கவாறு சமநிலைப் படுத்தவும் உதவும் ஓர் முக்கிய உறுப்பு நாக்கு. இது, பொதுவாக நாம் அறிந்த விஷயம்தான். ஆனால், நாக்கைப் பற்றி நாம் அறியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே வெளிக்காட்டும் கண்ணாடி. நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான், எந்தப் பிரச்னை என்றாலும் மருத்துவர்கள் முதலில் நாக்கைக் காண்பியுங்கள் என்று டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்த்த உடனே, நம் உடலுக்கு என்ன பாதிப்பு என்பதை ஓரளவுக்கு அனுமானித்து விடுவார்கள். பொதுவாக நம் நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும்.
உங்கள் வயிற்றில் குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?
குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது. குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது. குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
பாண்டியம்மாள் வயது 97, அருணாச்சலம் வயது 67... மதுரை மருத்துவர்கள் நடத்தும் குழந்தைகள் காப்பகம்! #SaveOldAgePeople
``வயதான, உடல்நலமில்லாத உங்கள் பெற்றோரையோ, தாத்தா-பாட்டிகளையோ உங்களால் கவனிக்க முடியவில்லை என்பதற்காக அவர்களை சாலையோரம் தூக்கி எறிந்துவிடாதீர்கள், அவர்களை எங்களிடம் அழைத்து வாருங்கள். கடைசிவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் அழுத்தம் திருத்தமாக உறுதிமொழி கொடுத்து, இருகரம் நீட்டி அழைக்கிறது. `நேத்ராவதி - வலி நிவாரணம், பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையம்.' மதுரையைச் சேர்ந்த இந்த அமைப்பின் லட்சியம், மனித நேயம், மகத்தான மருத்துவச் சேவை. மதுரை கடச்சனேந்தலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது `நேத்ராவதி'. கால்நடைகள் உள்ளே நுழையாமல் இருக்க முள்வேலி போடப்பட்டிருக்கிறது. வாசலில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று நின்றுகொண்டிருக்கிறது. மேலும் சில இருசக்கர வாகனங்கள் நிறுகொண்டிருக்கின்றன. கீழ்த்தளத்தில் 25 படுக்கைகளுடன் செயல்பட்டுவருகிறது இந்த அமைப்பு. அங்கே 24 முதியவர்கள் தங்கியிருக்கிறார்கள்.
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான 10 ஹார்மோன்கள்!!
உடல் எடையை சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்பது எல்லா பெண்களின் ஆசையாகவே இருக்கிறது. ஆனால் பெண்களின் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் அவர்களது உடல் எடையை யும் தாக்கி விடுகின்றன. ஆரோக்கியமான உணவால் மட்டுமே பெண்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க முடியாது. சில ஹார்மோன்களின் சமநிலையின்மை அவர்களின் உடல் எடையை அதிகரித்து விடுகிறது. தீராத பசி, தொப்பை, மெதுவான மெட்டா பாலிசம், சீரணமின்மை மற்றும் ஆற்றல் குறைவு போன்ற காரணங்கள் ஹார்மோன்களின் சமநிலையின்மை மாற்றத்தால் ஏற்படும் அறிகுறிகளாகும். இந்த பிரச்சினைகளே அவர்களின் உடல்வாகுகளையும் பாதித்து விடுகிறது. ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் உடல் எடை கரையாத கொழுப்பு களால் ஏற்படுகிறது.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


50K+ people are using this