facebook pixel
chevron_right Politics
transparent
போயஸ் கார்டன் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை: போலீசார் குவிப்பு
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
தமிழகத்தில் தற்போது ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா? டி.டி.வி.தினகரன் கேள்வி
2 ஆண்டுகள் சிறை தண்டனை தொடர்பாக வழக்கை நடராஜன் சட்டப்படி எதிர்கொள்வார் என தூத்துக்குடியில் அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை அழித்து வளர வேண்டும் என்று நினைப்பவர்களை விடமாட்டோம் என்றும் எத்தனை சோதனைகள் வந்தாலும் அதிமுகவை காக்க முழு முயற்சி செய்து வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக உள்ளதாகவும், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கே அதிகாரம் உள்ளது என கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெறுகிறதா ? தகுதி நீக்கம் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு எதிரான தீர்ப்பு வரும் என்றும் பெரும்பானமையை நிரூபிக்க முடியாமல் இந்த ஆட்சி கவிழும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.
பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து கூடிவாழ வேண்டும்: ஓ.பி.எஸ் பேச்சு
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. தேனி மாவட்டத்தில் ரூ.125 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து ஊரக பகுதி மக்களின் வாழ்வாரத்தை உயர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
நவ.22-ம் தேதி ரேஷன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
நவ.22-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மின்சார மீட்டர் கொள்முதல் விவகாரத்தில் நான் தவறான தகவல் ஏதும் கூறவில்லை என்றும் நான் தவறான தகவல் கூறுவதாக நினைத்தால் அமைச்சர் தங்கமணி என் மீது வழக்கு தொடரட்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்களின் அபிமானம் பெற்ற தேசிய தலைவர் மோடி!
அமெரிக்காவைச் சேர்ந்த, 'பியூ' ஆராய்ச்சி மையம், தேசிய அரசியல் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும், இந்தாண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு அறிக்கையை, சமீபத்தில் வெளியிட்டு உள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் மிகவும் பிரபலமான அரசியல்வாதி களில், பிரதமர் நரேந்திர மோடி, 88 சதவீத மக்களின் ஆதரவுடன் முதலிடத்தில் உள்ளார். புதுடில்லி: 'மூன்றாண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் மவுசு பெரிய அளவில் குறையவில்லை. மக்களின் அபிமானம் பெற்ற தேசிய தலைவராக அவர் உள்ளார்; 88 சதவீத மக்கள், அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டின் எதிர்காலம் குறித்து, 70 சதவீத மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்' என, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்.,துணை தலைவர் ராகுலுக்கு, 58 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்குச் செல்லும் கவர்னர்: பொதுமக்கள் வரவேற்பு
சென்னை:கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு திடுமென சென்று, அங்கிருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்தி ஆய்வுகளை மேற்கொண்டார் கவர்னர் பன்சாரிலால் புரோகித். அடுத்தடுத்தும், அவர் பல மாவட்டங்களுக்கும் இதே பாணியில் செல்ல இருக்கிறார். இந்நிலையில், கவர்னரின் இந்த செயல்பாட்டுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடுமையான விமர்சனத்தை வைக்கின்றனர். ஆனால், ஆளும்கட்சித் தரப்பில், இதுவரை, இது தொடர்பாக எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை. பாராட்டி கடிதங்கள்: இதற்கிடையில், கவர்னரின் இந்த செயல்பாட்டை பாராட்டி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், கடிதங்கள் குவிகின்றன. எங்கள் மாவட்டத்துக்கும் உடனடியாக இப்படிப்பட்ட விசிட் அடியுங்கள்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா?: திருமாவளவன்
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய- இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். மேலும் பாஜக ஆட்சியில் இந்திய கடலோர காவல்படையே மீனவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வட இந்தியர்கள் பாதித்தால் நடவடிக்கை எடுக்கும் சுஷ்மா ஸ்வராஜ் தமிழக மீனவர்கள் பிரச்சனையிலும் அக்கறை காட்ட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா?: ஜெயக்குமார்
தெளிந்த நீரோடை போல் தமிழக அரசு வெளிப்படையானது என்றும் டெண்டரில் யாரும் ஊழல் செய்ய முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது இந்திய- இலங்கை கடற்படைகளின் கூட்டுச்சதியா என அவர் வினவியுள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் இந்திய கடலோர காவல்படையே மீனவர்களை தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


50K+ people are using this