facebook pixel
chevron_right Sports
transparent
வெளியேறியது கோல்கட்டா அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., தகுதிச் சுற்று-2ல், 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த கோல்கட்டா அணி, பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறியது. மும்பையில், வரும் 27ல் நடக்கவுள்ள பைனலில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தியாவில், 11வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. நேற்று, கோல்கட்டாவில் நடந்த இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை உரிமையாளராக கொண்ட கோல்கட்டா அணி, ஐதராபாத்தை சந்தித்தது. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், 'பீல்டிங்' தேர்வு செய்தார். நல்ல துவக்கம் ஐதராபாத் அணிக்கு விரிதிமன் சகா (35), ஷிகர் தவான் (34) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. குல்தீப் யாதவ் 'சுழலில்' கேப்டன் வில்லியம்சன் (3) சிக்கினார். சாகிப் அல் ஹசன் (28) 'ரன்-அவுட்' ஆனார்.
IPL 2018: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஐதராபாத் அணி
IPL 2018 தொடரின் முதல் குவாலிப்பையர் போட்டியில் ஐதராபாத் அணியை வென்று சென்னை அணி நேரடியாக பைனலுக்கு நுழைந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் குவாலிப்பையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ஆரம்ப முதலே அதிரடியாக விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் அணி 174 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 350 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. லண்டன், இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆதிக்கம் செலுத்திய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எளிதில் முன்னிலை பெற்றனர். ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் குவித்து 166 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத் அணி
வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாவது தகுதி சுற்றில் ஐதராபாத்-கொல்கத்தா அணிகள் இன்று மோதியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஐதராபாத் அணி முன்னேறியது. 8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்துக்கு வந்து விட்டது. முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ஐதராபாத் சன்ரைசர்சும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்சும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் ரியல்மாட்ரிட்-லிவர்பூல் இன்று மோதல்
லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு மோதுகின்றன. கீவ், இந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)- லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் இன்று இரவு மோதுகின்றன. ரியல்மாட்ரிட் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கோப்பைக்கு முன்பாக நடக்கும் மிகப்பெரிய போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார்
வீரர்களை அரவணைத்து நன்கு பழகக்கூடிய ஒரு வீரர் டோனி. அவருக்காக இந்த முறை ஐ.பி.எல். இறுதிப்போட்டியையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இணையதளத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியை எட்டிய போது எங்களது கேப்டன் டோனி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் சென்னை அணி மீது அதிக அக்கறை செலுத்தி, கவனமுடன் செயல்படுகிறார். 2008-ம் ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக வியப்புக்குரிய வகையில் விளையாடி வருகிறார். வீரர்களை அரவணைத்து நன்கு பழகக்கூடிய ஒரு வீரர் டோனி. அவருக்காக இந்த முறை ஐ.பி.எல். டோனி மீது அடிக்கடி விமர்சனங்கள் எழுவது உண்டு. அப்போதெல்லாம் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பதில் சொல்லி இருக்கிறார்.
ஆல் ரவுண்டராக அசத்தினார் ரஷித் கான்.....பைனலுக்கு முன்னேறியது சன்ரைசர்ஸ்: சென்னையுடன் நாளை மோதல்
நைட் ரைடர்ஸ் அணியுடனான குவாலிபயர் 2 ஆட்டத்தில், 13 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஐபிஎல் டி20 தொடர் 11வது சீசனின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீசியது. சன்ரைசர்ஸ் தொடக்க வீரர்ரகளாக விருத்திமான் சாஹா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 56 ரன் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். தவான் 34 ரன் விளாசி குல்தீப் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் மட்டுமே எடுத்து குல்தீப் சுழலில் விக்கெட் கீப்பர் கார்த்திக் வசம் பிடிபட்டார்.
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட்: முன்னிலை பெற்றது பாகிஸ்தான்
இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (58.2 ஓவர்). தொடக்க வீரர் அலஸ்டர் குக் 70, பேர்ஸ்டோ 27, ஸ்டோக்ஸ் 38, பட்லர் 14 ரன் எடுக்க, கேப்டன் ஜோ ரூட் உட்பட மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்பாஸ், ஹசன் அலி தலா 4, ஆமிர், பாஹீம் அஷ்ரப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான், முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன் எடுத்திருந்தது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து பைனல்....ரியல் மாட்ரிட்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ரியல் மாட்ரிட் - லிவர்பூல் அணிகள் இன்று மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, உக்ரைன் நாட்டின் தலைகரான கீவில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15க்கு தொடங்குகிறது. ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கான இந்த போட்டியில், ரியல் மாட்ரிட் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூல் அணியின் முகமது சாலா இருவரின் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினடின் ஜிடேன், லிவர்பூல் பயிற்சியாளர் ஜர்கன் கிளாப் இருவரின் அனுபவ வியூகங்களும் இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் டிவோன் ஸ்மித்
இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில், முன்வரிசை பேட்ஸ்மேன் டிவோன் ஸ்மித் 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம் பிடித்துள்ளார். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின், குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூன் 6ம் தேதி தொடங்குகிறது. 2வது டெஸ்ட் செயின்ட் லூசியாவிலும் (ஜூன் 14-18), கடைசி டெஸ்ட் பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்திலும் (ஜூன் 23-27) நடைபெற உள்ளன. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் மொத்தம் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சாதிக்கும் முனைப்பில் அன்னையர்!
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ் , விக்டோரியா அசரென்கா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்க உள்ளனர். இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டு தாயான பிறகு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ளதால், பிரெஞ்ச் ஓபனில் இவர்கள் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது செரீனா 453வது இடத்திலும், அசரென்கா 82 வது இடத்திலும் பின்தங்கியுள்ள நிலையில், தகுதிநிலையில் இடம் பெறாத வீராங்கனைகளாக பிரெஞ்ச் ஓபனில் விளையாட உள்ளனர். ரோலண்ட் கேரோஸில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்ட செரீனா, அசரென்கா.
ரோலண்ட் கேரோஸ் கிராமத்தில் நடால்...
டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. பிரதான சுற்று நாளை தொடங்க உள்ள நிலையில், முன்னணி வீரர், வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ரோலண்ட் கேரோஸ் விளையாட்டு கிராமத்துக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரெஞ்ச் ஓபனில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற சாதனை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) கலந்து கொண்டார். ரசிகர்கள் புடைசூழ உற்சாகமாக வருகிறார் நடால். அவர் தனது முதல் சுற்றில் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் டோல்கபோலோவை எதிர்கொள்கிறார்.
2018 ஐபிஎல் சாம்பியன் யார்.... சிஎஸ்கே, ஹைதராபாத் மோதல்!
இதுவரை நடந்துள்ள 10 ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான், டெக்கான், சிஎஸ்கே, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய அணிகளே கோப்பையை வென்றுள்ளன. இந்த சீசனில் மீண்டும் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் 11வது சீசனின் பைனல்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மும்பையில் நடக்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில் மும்பை அதிகபட்சமாக மூன்று முறை கோப்பையை வென்றது. சிஎஸ்கே, கொல்கத்தா தலா 2 முறை வென்றுள்ளன. ராஜஸ்தான், டெக்கான், ஹைதராபாத் அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வென்றுள்ளன.
கடவுளின் கையால்' கோல்
கால்பந்து போட்டிகளில் கோல்கீப்பர் தவிர, மற்ற வீரர்கள் கையால் பந்தை தொடுவதே தவறு. ஆனால், கையால் கோல் அடித்த அதிசயம் 1986ல் மெக்சிகோவில் நடந்த 13வது உலக கோப்பை தொடரில் அரங்கேறியது. இதில், மொத்தம் 24 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றுப் போட்டிகள் 'ரவுண்ட்-ராபின்' முறையில் நடந்தன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரேசில், இத்தாலி அணிகள் சாதிக்கவில்லை. ஜூன் 22ல் நடந்த காலிறுதியில் அர்ஜென்டினா, இங்கிலாந்து அணிகள் மோதின. 51வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் மாரடோனா தலையால் முட்டுவது போல, தனது இடது கையால் பந்தை தட்டி தவறாக கோல் அடித்தார். இதனை கவனிக்காத நடுவர் நாசர், கோல் என அறிவித்தார். இதற்கு, இங்கிலாந்து கோல்கீப்பர் பீட்டர் ஷில்டன் மற்றும் சக வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பலனில்லாமல் போனது.
இங்கிலாந்து பவுலர்கள் திணறல்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லார்ட்சில் நடக்கிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 184 ரன்கள் எடுத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (18), ஹாரிஸ் சோகைல் (21) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. அசார் அலி (5௦) அரைசதம் எட்டினார். சோகைல் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆசாத் சபிக், பாபர் அசாம் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்தனர். ஸ்டோக்ஸ் 'வேகத்தில்' சபிக் (59), கேப்டன் சர்பராஸ் (9) சிக்கினார்.
'ஸ்மார்ட் வாட்ச்': ஐ.சி.சி., தடை
மைதானம், 'டிரெசிங் ரூம்' பகுதியில் 'ஸ்மார்ட் வாட்ச்' உள்ளிட்ட எவ்வித தகவல் தொடர்பு சாதனமும் பயன்படுத்த ஐ.சி.சி., தடை விதித்துள்ளது. லார்ட்சில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசம், ஆசாத் சபிக் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்திருந்தனர். இதில் இணையதள வசதி இருப்பதால், 'ஆன்-லைன்' சூதாட்டத்திற்கு வழிவகுக்கும் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) புதிய கட்டுப்பாடுகள் விதித்தது. இதன் படி, 'மைதானம், 'டிரெசிங் ரூம்' பகுதிகளில் இணையதள வசதி கொண்ட எவ்விதமான தகவல் தொடர்பு சாதனங்களையும் பயன்படுத்தக்கூடாது. 'வை-பை' வசதி கொண்ட 'ஸ்மார்ட் வாட்ச்' உபயோகப்படுத்தவும் தடை உள்ளது. இம்மாதிரியான பொருட்களை மைதானத்திற்குள் வருவதற்கு முன்பாகவே போட்டி அதிகாரிகளிடம் வீரர்கள் தந்துவிட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோஹ்லி என்ன இயந்திரமா
இந்திய கேப்டன் கோஹ்லி ஒன்றும் இயந்திரம் ('மெஷின்') கிடையாது. இவருக்கு நிச்சயம் ஓய்வு தேவை, என, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 29. வரும் ஜூலையில் துவங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் சாதிப்பதற்காக, கவுன்டி சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க இருந்தார். ஆனால் ஐ.பி.எல்., தொடரில் இவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கவுன்டியிலிருந்து விலகினார். தொடர்ச்சியான போட்டிகள் காரணமாக இப்படி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது: கோஹ்லி தொடர்ந்து போட்டிகளில் விளையாடுகிறார். ஓய்வில்லாமல் செயல்பட இவர் ஒன்றும் மெஷின் கிடையாது. இவரும் ஒரு மனிதர் தான். எரிபொருளை வைத்து பின்புறம் இருந்து இயக்கி ராக்கெட் செலுத்தும் விஷயம் அல்ல கிரிக்கெட்.
சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது கொல்கத்தா.... பைனலிற்கு முன்னேறியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
இரண்டாவது குவாலிபயர் போட்டியில் கொல்கத்தா அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்க வீரர்கள் தவான்-சாஹா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்து சிறப்பான துவக்கம் தந்தது. தவான் 34 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 3 ரன் எடுத்திருந்த நிலையிலும் குல்தீப் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதேபோல் சாஹா 35 ரன்கள் எடுத்து சாவ்லா பந்தை சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கார்த்திக்கின் அசத்தல் ஸ்டம்பிங்கால் பெவிலியன் திரும்பினார். ஆல் ரவுண்டர் ஷகீப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.
ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை
ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள கைக்கடிகாரத்தை அணிய, கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். கிரிக்கெட் மைதானத்துக்குள் கைப்பேசி, வாக்கி டாக்கி, உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு செல்ல வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் இந்த முறை, சர்வதேச போட்டிகள் முதல் ஐ.பி.எல் தொடரிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கைகளில் ஆப்பிள் கைக்கடிகாரத்தை கட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த கைக்கடிகாரத்தின் மூலம் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்பதால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு அதிகாரிகள், ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய வீரர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்கள் குவிப்பு! #Qualifier2
ஐபிஎல் குவாலிஃபையர் இரண்டில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 174 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏற்கெனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதப்போகும் அணியைத் தீர்மானிக்கும் குவாலிஃபையர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். கொல்கத்தா அணியின் ஷிவம் மவி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் சர்மா, கோஷ்வாமி, மனிஷ் பாண்டே ஆகியோருக்குப் பதிலாக விருத்திமான் சஹா, தீபக் ஹூடா, அஹமது உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர்.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


90K+ people are using this