facebook pixel
chevron_right Top
transparent
பிரதமருக்கு ராகுல் காந்தி ஆதரவு கடிதம்: மகளிர் மசோதா நிறைவேற்றப்படுமா?...முலாயம், லாலு கட்சிகள் எதிர்ப்பு?
33:31 புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, கடந்த 2010ம் ஆண்டு, மார்ச் 9ம் தேதி மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அதிகாரமளித்தலுக்கும் தீவிரமாகப் போராடி வருவதாக பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. சட்டசபை, நாடாளுமன்றத்தில் பெண்கள் தங்களுக்குரிய சரியான பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும். இதற்காக வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, ஆளும் பாஜ அரசு நிறைவேற்ற வேண்டும்.
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்கு
37:01 லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா அணி 257 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 257 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.
மலைப்பகுதியில் சாரல்மழை நீடிப்பு பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றும் 5 அடி உயர்வு
40:51 வி.கே.புரம்: தொடர்மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் இன்றும் 5 அடி உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து சாரல் இருந்தது இல்லை. ஆனால் இந்த ஆண்டு சீசன் அருமையாக உள்ளதால் அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையில் கடந்த இரு நாட்களில் மட்டும் 10 அடி உயர்ந்து உள்ளது. நேற்று 102 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 5 அடி உயர்ந்து 107 அடியாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5689.35 கன அடி தண்ணீர் வருகிறது. 1404.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறில் நேற்று 121.59 அடியாக இருந்த நீர்மட்டம் 6 அடி கூடி இன்று 127.95 அடியாக உயர்ந்துள்ளது. மணிமுத்தாறில் 79.60 அடி உள்ளது.
சுகாதார கேடு ஏற்படும் அபாயம் சோதனை சாவடிகளில் தடையின்றி செல்லும் இறைச்சி கழிவு வாகனங்கள்
56:29 ஆரல்வாய்மொழி: கேரளாவில் இருந்து குமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கோழி கழிவுகள் அதிக அளவில் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதனால் அந்த வாகனத்தில் இருந்து விழும் கழிவுகள், கழிவுநீர் ரோட்டில் விழுவதால் துர்நாற்றமும், சுகாதார கேடும் ஏற்பட்டது. இதனால் காவல்துறை குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்து அந்தந்த பகுதி பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.இந்த கழிவுகளை ஏற்றி வருவதற்கு தனி ஏஜென்சி செயல்படுவதாகவும், வாகனங்களுக்கு அதிகளவில் வாடகை வசூலிப்பதால் கோழி கழிவுகளை ஏற்றி வருவதற்கு வாகனங்களை வைத்து இருப்பவர்கள் ஆர்வமாக முன்வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சோதனை சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் கோழி கழிகள் தடையின்றி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
100 அடியை எட்டியது மேட்டூர் அணை: பாசனத்திற்காக அணை திறப்பு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
நீட்டிப்பு செய்து ஒரு ஆண்டு ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் இன்டர்சிட்டி ரயில்
07:22 நாகர்கோவில்: திருநெல்வேலியில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி ரயில் கடந்த 2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும்படியாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 2017ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தம் கொடுக்கப்படவில்லை. தற்போது இரணியல் ரயில் நிலையத்தில் தினசரி 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இரணியல் ரயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் நாகர்கோவில் ரயில் நிலையமும்ல மறுமார்க்கம் 15 கி.மீ தொலைவில் குழித்துறை ரயில் நிலையமும் அமைந்துள்ளன.
அறந்தாங்கி அரசு பள்ளி அருகே இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி
27:47 அறந்தாங்கி: அறந்தாங்கி ஒன்றியம் தாந்தாணி ஊராட்சிக்கு உட்பட்டது தேவர்பட்டி. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கொல்லன்வயல் பகுதியில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் குடிநீர் தேவர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரமாகி, பின்னர் பொதுக்குடிநீர் குழாய்களுக்கு செல்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தினமும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமாகி வருகிறது. அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மாணவ, மாணவியர் இந்த குடிநீர் தொட்டி வழியாகவே வந்து செல்கின்றனர்.
அருப்புகோட்டை வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான்.. அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
அருப்புக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். அருப்புக்கோட்டையில் உள்ள ஒப்பந்ததாரர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. இவரும் இவரது மகன் நாகராஜும் இணைந்து எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடத்தினார்கள். இதுவரை அருப்புக்கோட்டை உட்பட 30 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 170 கோடி ரொக்கம், 120 கிலோ தாகம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சோதனை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். இந்த சோதனை சாதாரணமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார். அதில், வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்றுதான். முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வந்தால் சோதனை செய்வது வழக்கம்.
கர்நாடக முதல்வரின் பரிசை வேண்டாமென திருப்பி அளித்த BJP MP!
கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அளித்த iPhoneX-னை வேண்டாம் என பாஜக MP ராஜீவ் சந்திரசேகர் திருப்பி அளித்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது! தனக்கு வந்த விலைமதிப்பான கைப்பேசியினையும், அதனை ஏன் வேண்டாம் என்றார் என்பது குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக MP ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளதாவது. மதிப்புமிகு கர்நாடக முதல்வர் HD குமாரசாமி அவர்களே. காவிரி விவகாரம் குறித்து அனைத்து MP-களும் விவாதிக்க அழைத்தமைக்கு நன்றி., ஆனால் அத்துடன் வந்திருக்கும் இந்த iPhoneX-னை என்னால் ஏற்க இயலாது.
பாராளுமன்ற தொடர் சுமுகமாக இயங்க ஒத்துழைப்பு தரவேண்டும் -மத்திய அரசு
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகள் பிரச்சனை போன்றவற்றை முன்வைத்து எதிர்க்கட்சி உட்பட பல கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக பாராளுமன்ற செயல்பாடுகளை முடக்கினர். முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற இயலாமல் போனது. தற்போது நடைபெறவிருக்கும் மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரிலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, மத்திய அரசுக்கு எதிராக நம்மிக்கையில்லா தீர்மானம் உட்பட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்நிலையில், இன்று மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் சாலையோர காணிக்கை வசூலில் முறைகேடு?
50:15 நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கி அம்மன் கோயிலில் சாலையோர காணிக்கை வசூலில் முறைகேடு நடப்பதால் அரசுக்கு கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. குமரி-நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தலில் இசக்கி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் குமரியை சேர்ந்தவர்கள் வெளியூர் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் வழியில் தங்களது வாகனங்களை நிறுத்தி வணங்கி காணிக்கை செலுத்துவது வழக்கம். இதே போல் லாரி டிரைவர்கள், சுற்றுலா பயணிகளும் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். அரசு பஸ்களில் செல்வோர் காணிக்கையை ஜன்னல் வழியாக வீசி அம்மனை வணங்கி செல்வது வழக்கம்.
பாராளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட பிரதமர் வேண்டுகோள்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் 'முத்தலாக்' உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு ஆர்வம் கொண்டு உள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகளும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டி ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் அனைத்துக் கட்சிகளும் எழுப்புகிற பிரச்சினைகளுக்கு அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை அனைவரும் எழுப்புவார்கள் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டார். பாராளுமன்றம் சுமுகமாக இயங்குவதற்கு அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கூட்டத்தை அடுத்து பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,.
புதுகை நகராட்சி பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவர்
15:02 புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசிரியரராக பணியாற்றி வந்தவர் பாக்கியம். இவரது மகன் பன்னீர்செல்வம் இதே பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தார். இந்நிலையில் தற்போது உயர்கல்வி முடித்துவிட்டு குவைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த தனது தாயார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணி காலத்திலேயே இறந்து விட்டார். தனது தாயாரின் நினைவாகவும், பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும் பள்ளிக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில் தனது தாயாரின் நினைவாக ரூ.2 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை அமைத்து கொடுத்து உள்ளார். இந்த ஸ்மார்ட் வகுப்பறை முற்றிலும் ஏசி வசதி கொண்டதாகவும், எல்.சி.டி பிரஜக்டர் லேப்டாப் போன்றவையுடன் அமைக்கப்பட்டு உள்ளது.
தார் தொழிற்சாலையை அகற்ற கோரிக்கை
34:58 திண்டுக்கல்: தார் தொழிற்சாலையால் நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அதனை மூட கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் காமாட்சிபுரம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் தார் உருக்குத் தொழிற்சாலை உள்ளது. இங்கு உருக்கப்படும் தார் பல்வேறு கட்டமைப்பு பணிக்காக டேங்கர் லாரிகளில் ஏற்றி செல்லப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வரும் கரும்புகை தங்களது ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக இந்த தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அந்த தொழிற்சாலை மீண்டும் இயங்கி வருவதாகவும், இதனால் உடல்நலம் பாதிக்கப்படுவதாக இப்பகுதிமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. எனவே இந்த தெழிற்சாலையை மூட கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அப்பகுதிமக்கள் வந்தனர்.
சத்ரபதி சிவாஜி சிலையின் உயரத்தில் மாற்றம் செய்ய அரசு திட்டம்
விலை சுமையை குறைக்க அரபி கடல் பகுதியில் அமையவுள்ள சத்ரபதி சிவாஜியின் நினைவாக எழுப்பப்படும் சிலையின் உயரம் குறைக்கப்படுகிறது. மும்பை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் 2016ம் ஆண்டில் அரபி கடல் பகுதியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவாக எழுப்பப்படும் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். இதற்காக இந்த வருடம் மார்ச்சில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ரூ.2,500 கோடி அளவிற்கு திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த நிலையில், திட்ட விலை சுமையை குறைக்க சத்ரபதி சிவாஜி சிலையின் உயரம் குறைக்கப்படுகிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு கிடைத்த தகவலில் தெரிய வந்துள்ளது. சிவாஜி சிலையின் உயரம் திட்டத்தின்படி 83.2 மீட்டர் என இருந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு
கனமழையால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து 1.17 லட்சம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த மாதம் இறுதியில் இருந்து கர்நாடகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: 17 குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வேண்டும்.. ஸ்டாலின் கோரிக்கை
சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அயனாவரத்தில் 11 வயது வாய் பேச முடியாத சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கு இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த குற்றவாளிகளுக்கு சார்பாக வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வக்கீல்கள் சிலர் சேர்ந்து குற்றவாளிகளை தாக்கிய சம்பவமும் நடந்தது.இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அரசு இதில் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Want to stay updated ?

x

Download our Android app and stay updated with the latest happenings!!!


90K+ people are using this